மக்களே இனி நீதி மய்யமாக மாற வேண்டும்! அம்மாவின் பிள்ளைகள் வேஷம் வெளுக்கும்… நடிகர் கமலஹாசன் அதிரடி ட்வீட்!

Default Image

மக்களே இனி நீதி மய்யமாக மாற வேண்டும் என நடிகர் கமலஹாசன் ட்வீட்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, இந்த மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில், இதனை மறுபடியும் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான காமலஹாசன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், இதுகுறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.’  என்றும் ஏற்கனவே திறந்த மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்து சொன்னது. தற்போது மீண்டும் திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை என வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.”என தனது டுவிட்டில்  பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்