புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய விஜய்.! சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் பூஜா ஹெக்டே.?

Published by
பால முருகன்

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஒரு சில கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அபர்ணா தாஸ், சதீஸ், பூஜா ஹெக்டே, நெல்சன், உள்ளிட்ட பலர் விஜயின் ராயல் ரோல்ஸ் காரில் பயணம் செய்தனர். அதற்கான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் செம வைரலானது.

இந்த நிலையில், அதைபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், பீஸ்ட் படப்பிடிப்பில் நடிகர் விஜய் தெலுங்கில் செம ஹிட்டான புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளாராம். விஜய்யுடன் சேர்ந்து நெல்சனின் மகன் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடனம் செய்துள்ளனர்.

அந்த வீடியோ நடிகை பூஜாஹெக்டேவிடம் உள்ளது. அந்த வீடியோவை, விஜயிடம் அனுமதி கேட்டு விட்டு வெளியிடுவார். அல்லது வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் வகையில் வெளியிட திட்ட மிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஆடிய அந்த  வீடியோவை சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்கள் என அவரது ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

3 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

4 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

5 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

6 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

9 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

9 hours ago