Suchitra about aishwarya rajinikanth and dhanush [File Image]
சென்னை : தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பிரபல பாடகியான சுசித்ரா கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி முன்னணி பாடகியாக இருப்பவர் சுசித்ரா. இவர் பிக் பாஸ் சீசன் 4-வது சீசன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டு இருந்தார். முன்னணி பாடகியாக வளம் வந்து கொண்டு இருந்த சமயத்திலே சுஜி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலன்களுடைய சீக்ரெட் புகைப்படங்களை வெளியீட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.
அதனை தொடர்ந்து சினிமாவில் பாடல்களை பாட பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தான் பிக் பாஸ் 4 -வது சீசனிற்குள் நுழைந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பேசி பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டு இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் நான் தனுஷ் பக்கம் தான் நிற்பேன்.
அதற்காக தனுஷை எனக்கு பிடிக்கும் என்று அர்த்தம் இல்லை எனக்கு அவரை பிடிக்கவே பிடிக்காது. என்னை பொறுத்தவரை, ஐஸ்வர்யா தனுஷை ஏமாற்றி இருக்கிறார்.தனுஷ் ஐஸ்வர்யாவை ஏமாற்றி இருக்கிறார். விவாகரத்து செய்தி வெளிவந்த சமயத்தில் பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யாவை புகழ்ந்து தனுஷை மட்டம் தட்டி பேசினார்.
ஆனால், தனுஷ் அவருடைய குழந்தைகளுக்கு ஐஸ்வர்யாவை விட சிறந்த பெற்றோராக இருந்துள்ளார். ஐஸ்வர்யா ஒரு தாயாக இருந்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போட்டுகொண்டு தன்னையே தான் ப்ரோமோஷன் செய்துகொண்டார். தனுஷ் எனக்கு ஜென்ம எதிரி எல்லாம் இல்லை. ஆனால் கார்த்திக் உடன் சேர்ந்து என்னுடைய கேரியரை நாசமாக்கிவிட்டார். அந்த கோபம் அவர் மீது எப்போதுமே இருக்கிறது.
ஆனால், விவாகரத்து விஷயத்தில் தனுஷ் பக்கம் நியாயம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஐஸ்வர்யா அவருடைய குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக இல்லை” என விமர்சித்து பேசியுள்ளார். இவர் இப்படி வெளிப்படையாக விமர்சித்து பேசி இருப்பது சினிமா துறையில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…