பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடித்து 5 மொழிகளில் வெளியாக உள்ள திரைப்படம் ராதே ஷியாம். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
பாகுபலி படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆகி விட்டார். அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சாஹோ திரைப்படம்தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாகி இருந்தது.
தற்போது அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷியாம் எனும் பிரமாண்ட திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தையும் படக்குழு 5 மொழிகளில் வெளியிட உள்ளது. அதுவும், தமிழில் வலிமை படத்துடன் ராதே ஷியாம் மோத இருக்கிறது.
இப்படத்தின் பிரமாண்ட ட்ரைலர் வெளியீட்டு விழா ஹைதிராபாத்தில் நேற்று ரசிகர்களின் அலை கடலின் நடுவே படு பிரமாண்டமாக நடைபெற்றது. நேற்று விழா முடிந்து ட்ரைலர் வெளியிடப்பட்டது.
ரசிகர்கள் எதிர்பார்த்தபடி காட்சிக்கு காட்சி காதலும், ஆச்சர்யமூட்டும் பிரமாண்டமும் கலந்திருந்தது. படத்தில் கைரேகை நிபுணராக பிரபாஸ் வருகிறார். அவர் காதலிக்கும் பெண்ணாக பூஜா ஹெக்டே வருகிறார். ஒரு கப்பல், அது கடலில் மூழ்குவது போல காண்பிக்கப்பட்டுள்ளது.
அதனை பார்க்கும் போது டைட்டானிக் பட ஞாபகம் வருகிறது. பார்க்கலாம், டைட்டானிக் அளவுக்கு இல்லையென்றாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மீண்டும் ஒரு பாகுபலியாக பிரபாஸ்க்கு ராதே ஷியாம் அமைகிறதா என்று .
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…