Categories: சினிமா

ரைட்டு…பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டை! வாயை கொடுத்த பிரதீப்…கடுப்பான விசித்ரா!

Published by
கெளதம்

பிக் பாஸ் சீசன் 7 சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகளை கொண்ட நிகழ்வாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் நாளில் இந்த வார வீட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் பாஸ். அதாவது, ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது என்றும், பிக் பாஸில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது.

மேலும், அவர்கள் ஷாப்பிங் செய்ய முடியாது, மூன்று வேலைக்கான உணவை பிக் பாஸ் ஹவுஸ் மெட்ஸ் முடிவு செய்ய, அதை மட்டும் தான் சமைத்து சாப்பிட வேண்டும். இப்படி இருக்கையில், இந்த சமையல் அறையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது, இரண்டாம் நாளான இன்று சண்டை தொடங்கிவிட்டது போல் தெரிகிறது. அட ஆமாங்க…பிரதீப் மற்றும் விசித்ரா இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அது என்னெவென்றால், இன்றைய நிகழ்வுக்கான முதல் ப்ரோமோவில், ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் தான் சமைக்க வேண்டியது என்பது  ரூல்.

இந்நிலையில், விசித்ரா மற்றும் யுகேந்திரன் அந்த ரூலை மீறி ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு சமையல் செய்ய உதவி செய்துள்ளனர். இதனால், இந்த இரண்டு நபர்களையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு விசித்ரா – யுகேந்திரன் செல்ல வேண்டுமென பிக் பாஸ் உத்தரவிடுகிறார்.

அதற்கு உடனே, தனது வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல் பிரதீப் அந்தோணி இங்க இருந்து 2 பேர் அங்க போன, அங்க இருந்து நாமினேட் ஆகாத 2 பேரை இங்க அனுப்புங்க பிக் பாஸ் என்று கூற, இதை கேட்டு கடுப்பான விசித்ரா அங்க இருந்து எதுக்கு இங்க 2 பேர் வேணும் என்று கோபடத்துடன் கேட்கிறார்.

அதற்கு, பிரதீப் அந்தோணி நீங்க இங்க இருந்து போனால் கடன் அடைக்க 2 பேர் இங்க வேணும் என்கிறார். அதற்கு மிகவும் கோபமடைந்த விசித்ரா எங்க இரண்டு பேருக்கும் சமமாக இருக்காங்களா இங்க வருவதற்கு என்று கேள்வி எழுப்ப வாயை மூடினார் பிரதீப். முதல் நாள் சுமுகமாக சென்ற பிக் பாஸ் வீடு இரண்டாம் நாள் விதி மீறல்களும் சண்டை கலமாக மாறியிருக்கிறது. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
கெளதம்

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

3 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

3 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

4 hours ago