pt sir movie [file image]
PTSir Twitter Review : ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் பிடி சார் படத்திற்கு ட்விட்டரில் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி கடைசியாக வீரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், அடுத்ததாக பிடி சார் (PTSir ) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் காஷ்மீர் பர்தேஷி, அனிகா சுரேந்திரன், முனிஷ்காந்த், இளவரசு, பாண்டியராஜன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியே இசையமைத்தும் இருக்கிறார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்துவிட்டு ஒருவர் ” சிறு குழந்தை முதல் வயதான பெண் வரை சமூகத்தில் சந்திக்கும் கசப்பான அனுபவங்களை வலியுடன் திரை வழியாக நமக்கு கடத்திய விதம் சூப்பர். அதற்கு இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலனுக்கு பாராட்டுக்கள்” என படத்தினை பார்த்துவிட்டு கூறியுள்ளார்.
மற்றோருவர் ” படம் கண்டிப்பாக உணர்வு பூர்வமாக அனைவரும் இணைக்கும். ஹாட்ஸ் ஆஃப் ஹிப் ஹாப் ஆதி. மற்றும் கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.அப்படி ஒரு நல்ல கருத்து. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டும் . அதிகம் எதிர்பார்க்காமல் வெறுமையான மனதுடன் செல்லுங்கள் இசை சில இடங்களில் வேலை செய்தது !! பாடல்கள் வேலை செய்யவில்லை” என கூறியுள்ளார்.
மற்றோருவர் ” படம் அருமையான திரைப்படம் நல்ல சமூக செய்தி படத்திற்குள் இருக்கிறது. 1வது பாதி – சூப்பர் இடைவேளை காட்சி 2வது பாதி – இடைவேளைக்கு பின் & கோர்ட் காட்சிகள் கொஞ்சம் மெதுவாக இருந்தாலும் கிளைமாக்ஸில் ட்விஸ்ட். ஹிப்ஹாப் ஆதி, அனிகா ஆகியோர் நடிப்பு அருமை பின்னணி இசையும் அருமை’ எனவும் கூறியுள்ளார்.
படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதன் காரணமாக கண்டிப்பாக இந்த படம் ஆதிக்கு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என தெரிகிறது. வசூல் ரீதியாகவும் நல்ல ஓப்பனிங் படத்திற்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…