ஒரே வாரத்தில் பாகுபலி வசூலை முறியடித்த ஆர்.ஆர்.ஆர்..!

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ளார்கள்.
அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்த படம் அணைத்து மொழிகளிலும் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், உலகம் முழுவது எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த படம் உலகம் முழுவதும் 710-கோடி வசூல் செய்துள்ளது. பாகுபலி திரைப்படம் மொத்தமாக 650 கோடிதான் வசூல் செய்தது. ஆர்.ஆர்.ஆர். இந்த சாதனையை ஒரே வாரத்தில் முறியடித்துவிட்டது.
பீஸ்ட்,கேஜிஎப் படங்கள் வெளியாகும் வரை ஆர்.ஆர்.ஆர் படம் நன்றாக ஓடி இன்னும் வசூலில் அதிகரிக்கும் என்பதில் சந்திகமே இல்லை.. படம் இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025