Chandramukhi2 [File Image]
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமாகும்.
அப்போது, இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தற்போது, படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திர லுக் மிரட்டலாக இருக்கிறது. ராஜாதி ராஜா, ராஜ கம்பீர, ராஜா மார்த்தாண்ட, ராஜ குல திலக… வேட்டையன் ராஜா பராக்…பராக்… என்று குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…