rajini and ajith [File Image]
நடிகர் அஜித் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சினிமாவை தாண்டி நல்ல பழக்கம் கொண்ட நபர்கள் என்றே கூறலாம். ரஜினிகாந்த் மீது அஜித் மிகப்பெரிய மரியாதையையும் வைத்திருக்கிறார். இது ஆரம்ப காலகட்டத்தில் அஜித் கொடுத்த பல பேட்டிகளை பார்த்தால் தெரியும். அது மட்டுமின்றி அஜித் தொடர்ச்சியாக அந்த சமயம் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்து கொண்டு இருந்தது.
இதனால் அஜித் அந்த சமயம் மிகவும் மன வேதனையில் இருந்த போது அஜித்தை சந்தித்து பில்லா படத்தை ரிமேக் செய்து நடிங்கள் எனவும் வில்லன் கதாபாத்திரம் உங்களுக்கு நன்றாக இருக்கிறது அந்த மாதிரி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிங்கள் என்று அஜித்திற்கு ரஜினிகாந்த் அட்வைஸும் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ஒரு முறை அஜித்துக்காக ஒரு இயக்குனர் கதை வைத்திருந்ததை கேட்டுவிட்டு அந்த கதையில் தான் நடித்தால் எப்படி இருக்கும் என்று இயக்குனரிடம் ரஜினி கேட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது வேறு எந்த திரைப்படமும் இல்லை இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ஜி படத்தின் கதை தான்.
இந்த திரைப்படத்தின் கதையை கூறி அஜித்திடம் சம்மதம் வாங்கிவிட்டு கதையை மெருகேற்றும் பணியில் அந்த சமயம் இயக்குனர் லிங்கு சாமி ஈடுபட்டுக்கொண்டிருந்தாராம். அந்த சமயம் எதிர்ச்சியாக ஒரு முறை ரஜினியை சந்தித்தபோது ரஜினி இப்போது என்ன படம் செய்து கொண்டு இருக்குறீங்க என்று கேட்டாராம். அதற்கு லிங்கு சாமி அஜித்தை வைத்து ஜி எனும் திரைப்படத்தை செய்கிறேன் என்று கூறினாராம்.
அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு படத்தின் கதையை லிங்கு சாமியிடம் ஜி படத்தின் கதையை கேட்டாராம். கேட்டவுடன் ரஜினிக்கு மிகவும் பிடித்து போக படத்தில் இந்த காட்சிகளை எல்லாம் மாற்றி எனக்கு செட் ஆகுற மாதிரி வைக்க முடியுமா நான் நடிக்கிறேன் என்று ரஜினிக்கேட்டாராம். அதற்கு லிங்கு சாமி இல்ல சார் அஜித் சாருக்கு எழுதி அவரிடம் இந்த கதையை கூறிவிட்டேன் என்று கூறினாராம்.
அதற்கு ரஜினியும் சம்மதம் தெரிவித்துவிட்டு படத்தை படத்தை நன்றாக எடுக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தாராம். இந்த தகவலை பேட்டி ஒன்றில் இயக்குனர் லிங்கு சாமி தெரிவித்துள்ளார். மேலும், பில்லா பட சமயத்தின் போது ரஜினி கொடுத்த அட்வைஸ் காரணமாக தான் பில்லா இரண்டு பாகங்களிலும் அஜித் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…