பள்ளிக்கு செல்ல மறுத்த பேரன்.. ரஜினிகாந்த் செய்த செயல்.! மகள் நெகிழ்ச்சி பதிவு.!

Rajini - grand son

சௌந்தர்யா ரஜினிகாந்த் : சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது முன்னாள் கணவர் அஸ்வின் ராம்குமார் ஆகியோரின் மகன் வேத் கிருஷ்ணா, பள்ளிக்கு செல்ல மறுத்ததும், பேரனை அழைத்து பள்ளிக்கு சென்ற சூப்பர் ஹீரோ தாத்தா (ரஜினிகாந்த்) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் (ஐஸ்வர்யா – சௌந்தர்யா) உள்ளனர். இதில், இளைய மகளான சௌந்தர்யாவும் அவரது முன்னாள் கணவருமான அஸ்வினும் தங்கள் மகன் வேத் கிருஷ்ணா பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு பிரிந்தனர். ஆம், சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடு காரணமாக 2017-ல் இருவரும் விவாகரத்து செய்தனர்.

இதன் பின், நடிகரும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடியை 2019-ம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, விசாகன் வணங்காமுடிக்கும் சௌந்தர்யாவுக்கு வீர் என்ற மகன் 2022-ல் பிறந்தார்.

இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், எனது மகன் இன்று பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை, அவனது தாத்தா அன்பாக தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்றார், நடிக்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் நீங்கள் சிறந்தவர், திரையிலும், நிஜத்திலும் என் அன்பான அப்பா என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், வேத் வகுப்பின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறிய மாணவி ரஜினியை பார்த்து ஷாக்கிங் ஆனார். ஆச்சரியத்தில் வாயை மூடிய அந்த பெண்ணின் முகபாவனையை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்