ரஜினியை கிண்டல் செய்தாரா பா.ரஞ்சித்! கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Published by
பால முருகன்

PaRanjith : ரஜினிகாந்த் ரசிகர்களை கோபப்படும் வகையில் பா.ரஞ்சித் செய்த விஷயம் பேசும் பொருளாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படங்களை தொடர்ந்து பா. ரஞ்சித் அடுத்ததாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார்.  இதற்கிடையில், பா.ரஞ்சித் செய்த விஷயம் ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் தொகுப்பாளர் ஒருவர் ‘நீங்கள் ரஜினியை வைத்து இரண்டு படங்களை இயக்கி இருக்கிறீகள். படத்தில் உங்களுடைய அரசியலை ரஜினியை வைத்து அவருடைய வாயால் சொல்லிவிட்டீர்கள் இருந்தாலும் நீங்கள் பேசிய அந்த அரசியல் ரஜினிக்கு புரிந்ததா?’ என சிரித்து கொண்டே கேட்டார்.

இந்த கேள்விக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில் கூறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அங்கு இருந்தவர்கள் சிரித்தது போல பா.ரஞ்சித்தும் சிரித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இப்படியா கேலியா சிரிப்பீர்கள்? என கொந்தளிக்க தொடங்கிவிட்டார்கள்.

ரஜினிகாந்த் ரசிகர்கள் “உங்களுக்கு ரஜினிகாந்த் பட வாய்ப்புகள் தரவில்லை என்றால் நீங்கள் இந்த நிலைமைக்கு வந்து இருக்கவே முடியாது எனவும் கொந்தளித்து கூறி வருகிறார்கள். பா.ரஞ்சித் சிரித்த இந்த விஷயம் பெரிய அளவில் பரபரப்பாக வெடித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்றே பலரும் கூறி வருகிறார்கள்.

Recent Posts

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

20 minutes ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

48 minutes ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

3 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

3 hours ago