விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ” பீஸ்ட்” திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்தாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.இந்த நிலையில், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை ராஷ்மிகாவிற்கு தளபதி 66 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
இதனை தொடர்ந்து நெகிழிச்சியுடன் நடிகை ராஷ்மிகா தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு “இது வேற மாதிரி சந்தோசமாக தோணுது..விஜய் சார் உங்களை பல வருடங்களாக திரையில் பார்த்துக் கொண்டிருந்தேன், இப்போது நான் செய்ய நினைத்ததை எல்லாம் செய்ய வேண்டும்.. அவருடன் நடிக்கவும், அவருடன் நடனமாடவும், அவருடன் பேசவும்..வாய்ப்பு கிடைத்து விட்டது, ஒரு முழுமையான மகிழ்ச்சி..” என பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…