Raveena and mani [file image]
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஓவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கதை மலரும். குறிப்பாக கடந்த சீசனில் அமீர் பாவனி இருவரும் காதலித்தனர். அதனை தொடர்ந்து இந்த சீசனில் யார் யாரை காதலிக்க போகிறார் என்ன ஸ்டோரி ரெடி ஆகா போகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், மணி மற்றும் ரவீனா இருவரும் இந்த முறை காதலிப்பார்கள் எனவும் அவர்களுக்கான ஸ்கிரிப்ட் ரெடி எனவும் முதல் நாளே நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் மணி மற்றும் ரவீனா வருவதற்கு முன்பே பல இடங்களில் ஒன்றாக சென்றுள்ளனர். இருவருமே நடனத்தின் மீது மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடனமும் ஆடி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சமீபத்தில், பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு மணியின் பிறந்த நாள் அன்று ரவீனா அவருடன் தான் ஒன்றாக பிறந்த நாளை கொண்டாடி இருந்தார்.
எனவே, இதனை வைத்து எல்லாம் பார்க்கையில் ஒரு வேளை இருக்குமோ என்பது போல நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதற்கு ஏற்றது போல மணி மற்றும் ரவீனா இருவருமே பிக் பாஸ் வீட்டிற்குள் அப்படி தான் நடந்து வருகிறார்கள். முதல் நாள் அன்றே காலை பாடலை போட்டு நடனம் ஆடும் போது மணி ரவீனாவை தூக்கினார்.
அதனை தொடர்ந்து அன்று இரவு மணி எதோ பிரச்சனை இருப்பதாக ரவீனாவிடம் கூறினார். அதற்கு ரவீனா என்ன பிரச்சனை என்று கேட்க அதற்க்கு அது வாயால் சொல்ல முடியாது நீ கையை காட்டு நான் எழுதி காமிக்கிறேன் மன ரீதியான பிரச்சனை என்று கூறி ஒரு படியாக நெழிந்தார்.
கையில் எதோ மணி எழுதி ரவீனா சற்று இன்ப அதிர்ச்சியாகி மணியவே பார்த்தார். பிறகு சிரித்துக்கொண்டு மணி இதுக்கு மேல பிரச்னையை சொல்ல மாட்டேன் என கூறிவிட்டு ஓடினார். இந்த வீடியோவும் வைரலானது. அதனை தொடர்ந்து இன்று காலை மணியின் கையை ரவீனா செல்லமாக கடித்து விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அதற்கு மணியும் இப்போது காதலர்கள் எல்லாம் இப்படி தான் விளையாடுவார்கள் என கூறினார். எனவே தொடற்சியாக இவர்கள் நடந்துகொள்வது பார்க்கையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்படப்போவதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…