50 கோடி டார்கெட்! ரீ-ரிலீஸ் ஆன கில்லி இப்போது வரை எவ்வளவு வசூல் தெரியுமா?

Published by
பால முருகன்

Ghilli Re Release : ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 25 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல்.

விஜயின் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்ட கில்லி திரைப்படம் ரசிகர்களுக்காக இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யபட்டது. ரீ -ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தை இப்போது தான் புதிதாக வெளியான படம் என்பது போல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் பலரும் குடும்பமாக சென்று படத்தை பார்த்து கண்டுகளித்து வருகிறார்கள். இப்படியான வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட அந்த முதல் நாளிலே 4 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து ரீ-ரிலீஸ் செய்த படங்களில் அதிகம் வசூல் செய்த சாதனையை படைத்தது இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ் ஆய்வாளர்கள் கணக்குப்படி, கில்லி ரீ-ரிலீஸ் உலகம் முழுவதும் மொத்தமாக 50 கோடிகள் வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார்கள். இதனையடுத்து, இதுவரை படம் வெளியானதில் இருந்து இப்போது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இதுவரை படம் 23 கோடி வசூல் செய்துள்ளதாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தினங்களும் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுகிறது. எனவே, கண்டிப்பாக இன்று படத்தின் வசூல் 25 கோடிகளை கடந்துவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 minutes ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

30 minutes ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

34 minutes ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

1 hour ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

2 hours ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

2 hours ago