saipallavi [File Image]
சாய் பல்லவி : மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். இதற்கிடையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி தான் நடிக்க ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை சாய் பல்லவி ” எனக்கு ஒரு படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்றால் எடுத்ததாகவும் அதைப்போலவே கதாபாத்திரத்தில் நடிக்க பிடிக்காது. வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. தெலுங்கில் ஃபிடா, லவ்ஸ்டோரி, ஷியாம் சிங்கராய், விரதபர்வம் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த படங்களில் எல்லாம் என்னுடைய கதாபாத்திரம் ஓவ்வொரு மாதிரி இருக்கும். இதில் இருந்து மிகவும் மாறுபட்ட காமெடியான கதாபாத்திரம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கவும் எனக்கு ஆசை இருக்கிறது. நிச்சியமாக அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நான் ஒரு படத்திலாவது நடிப்பேன் என்று ஆசைப்படுகிறேன்.
இந்த மொழியில் தான் நடிப்பேன்…அந்த மொழியில் தான் நடிப்பேன் என்று எல்லாம் எனக்கு இல்லை எல்லா மொழிகளிலும் நான் நடிப்பேன்” எனவும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார். சாய் பல்லவிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானதற்கு காரணமே அவர் ஹோம்லியான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்தது தான். இந்த சூழலில் அவர் காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை படுவதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளதால் அது எப்படி மேடம் செட் ஆகும்? என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
மேலும், நடிகை சாய்பல்லவிதற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…