”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!
கைது செய்யப்பட்ட இஷா சாம்ரா என்ற பெண்ணிடம் மும்பை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் போது, நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான் மும்பையின் ஆடம்பரப் பகுதியான பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இந்த நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன் தினம் (மே 20) இரவு சுமார் 7:15 மணியளவில், குமார் சிங்
என்ற நபர் பாதுகாப்பைத் தவிர்த்து அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்தார்.
பின்னர், தகவல் கிடைத்தவுடன் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த நபரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, நேற்றைய தினம் (மே 21) சல்மான் கானின் குடியிருப்பில் அத்துமீறி நுழைய முயன்ற 36 வயதான இஷா சாப்ரியா என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரண்டு நபர்களிடமும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சல்மானின் வீட்டிற்குள் நுழைந்த பெண் இஷா சாப்ராவின் புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது லிஃப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இஷா சாப்ராவிடம் போலீஸ் விசாரணையின் போது, சல்மான் கானை தனக்குத் தெரியும் என்றும், ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு விருந்தில் சல்மான் கானை சந்தித்ததாகவும் தெரிவித்தார். நடிகரின் அழைப்பின் பேரில் தான் வந்ததாகவும் தான் வளாகத்திற்குள் நுழைந்து அவரது அடுக்குமாடி குடியிருப்பின் கதவைத் தட்டியதாகவும், கானின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கதவைத் திறந்ததாகவும் அவர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி, கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, சல்மான் கானின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது, மகாராஷ்டிரா அரசால் அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025