மாநாட்டை கைப்பற்றிய முன்னணி டிவி சேனல்.! நிஜமான டைம் லூப் இனி தான் ஆரம்பம்.!

மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாம்.
மாநாடு திரைப்படம் சாட்டிலைட் உரிமம் விற்கப்படாமல் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அதன் ரிலீஸ் தேதியே மாற்றியமைக்கும் சூழல் உருவானது. அப்போது தக்க நேரத்தில் தன்னுடைய மகனுக்காக மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கான தொகையை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் டி.ஆர்.
தற்போது மாநாடு திரைப்படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், தற்போது மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கு பலத்த போட்டி இருந்தது.
தற்போது, அந்த போட்டியில், விஜய் டிவி வென்றுள்ளது. ஆம், விஜய் டிவி மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கியுள்ளதாம். படத்தின் கரு டைம் லூப் என கூறப்படுகிறது. அதாவது நடந்த சம்பவம் திரும்ப திரும்ப நடக்கும் கதைக்களம். அதனை ஒப்பிட்டு, ரசிகர்கள் இணையத்தில் இனி தான் டைம் லூப் ஆரம்பமாகிறது என கூறி வருகின்றனர். விஜய் டிவி ஒரு படத்தை வாங்கிவிட்டால் அதனை திரும்ப திரும்ப ஒளிபரப்புவார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025