Satyaraj is villain [file image]
Sathyaraj: அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு எல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் சத்யராஜ், அப்போது பலருக்கும் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பினார் என்றே சொல்லலாம். அதிலும், இயக்குனர் மணிவண்ணனுடைய நூறாவது நாள் படம் நடிகர் சத்யராஜின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம்.
இப்படி இருக்கையில் அண்மையில் ஒரு மேடை ஒன்றில் வெளிப்படையாக தான் வில்லனாக நடிப்பது குறித்து பல படங்களை கிண்டல் செய்து இருப்பதாகவும் ஒப்பனாக பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘நான் சத்யராஜாக இருப்பதற்கு ஒரே காரணம் மணிவண்ணன் சார் தான். பல பேர்ல அவர் ஒருத்தர் இல்லை அவர் ஒரே ஆள் தான் காரணம். அதாவது ‘நூறாவது நாள்’ படத்துல 24 மணி நேரத்துல என்னை வில்லனாக்கிய மணிவண்ணன்.
இந்த படத்துக்கு பின், அடுத்த ஒரு வருடத்தில் 27 படத்துல வில்லனாக நடித்தேன். அப்போ உள்ள சத்யராஜே பார்க்கவே முடியாது. அப்போது எனக்கு பொறுப்பே கிடையாது பொறுப்பில்லாதவன், அப்போ ஒரு படத்தில் வில்லனாக நடிக்கும் போது இந்த படத்தை எல்லாம் நான் நடிக்கணுமா அப்படின்னு நக்கலாக பேசுவேன்.
என்ன எழவு படும் இது அப்படின்னு கிண்டலாக பேசுவேன். சரி நமக்கு நடிச்ச காசு வருது, அது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள விவகாரம் அப்படின்னு சொல்லிட்டு ஜாலியா நடிச்சிடுவேன். ஒரு காலத்தில் ஹீரோகளுக்கு பஞ்சம் வருது, பாரதிராஜா சார் காலகட்டத்தில் நிறைய ஹீரோவாக்கள் வந்தார்கள்.
அப்புறம் அவர்கள் எல்லாம் காலாவதியானார்கள், அதன் பின் என்னை கம்பெல் சரியாக ஹீரோவாக நடிக்க சொல்லி சொன்னாங்க. அதன் பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நான் என்று சத்யராஜ் கூறிஉள்ளார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…