yuvan shankar raja [file image]
கோட் : பொதுவாக விஜய் படத்தில் இருந்து எதாவது அப்டேட் வெளியானால் போது நெகட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் வருவதோடு மற்றோரு பக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துவிடும். அப்படி தான் கோட் படத்தில் இருந்து கடைசியாக வெளியான ‘ஸ்பார்க்’ பாடல் கூட. படத்தின் மூன்றாவது பாடலான இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடி இருந்தார்.
பாடலை கங்கை அமரன் எழுதி இருந்தார். பாடல் கேட்க கேட்க ஒரு பக்கம் நன்றாக இருந்தாலும் கூட பல ரசிகர்களுக்கு முதலில் பாடல் பிடிக்கவில்லை. எனவே, வெளியான அந்த நாளில் இருந்து அதற்கு அடுத்த நாள் வரை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை கடுமையாக ட்ரோல் செய்து பாடல் மிகவும் மொக்கை என்பது போல விமர்சனங்களை கிளப்பினார்கள்.
கோட் படத்திற்கு வில்லன் யுவன் சங்கர் ராஜா தான் என்பது போலவும் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். மற்றோரு பக்கம் யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் இதற்கு மேல் எப்படி பாடல் போட முடியும்? என்பது போல கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். வெளியான முதல் நாளில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தநிலையில், தற்போது பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
பாடலை கேட்டு வழக்கம் போல பலரும் சமூக வலைத்தளங்களில் நடனம் ஆடி வீடியோக்களை வெளியீட்டு வருகிறார்கள். மேலும், பாடல் கேட்க கேட்க நன்றாக இருக்கிறது தெரியாமல் திட்டிவிட்டோம் டிரக் டீலர்னா சும்மாவா? என யுவன் சங்கர் ராஜாவை பாராட்டி வருகிறார்கள். இப்போது யூடியூபில் ஸ்பார்க் பாடல் தான் ட்ரெண்டிங்கின் நம்பர் 1ல் இருக்கிறது.
மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த கோட் படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, பிரசாந்த் தியாகராஜன், பிரபு தேவா, அஜ்மல் அமீர், பிரேம் ஜி, மோகன், யோகி பாபு, சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…