சிம்பு மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் : கௌதம் கார்த்திக்

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சிம்பு ஸ்டூடியோ ஸ்கிரீன் புரொடெக்சன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார். இந்த படம் 2017-ம் ஆண்டு கன்னடத்தில், சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும்.
இதனையடுத்து, நடிகர் சிம்பு இப்படத்தில் நடிக்கும் போது, ஒரு சன் கிளாஸை ஒரு முறை மட்டும் பயன்படுத்தியுள்ளார். இந்த சன் கிளாஸ் கௌதம் கார்த்திக்கு மிகவும் பிடித்திருந்த நிலையில், நடிகர் சிம்பு அந்த சன் கிளாசில் ஆட்டோகிராஃபை போட்டு, கௌதம் கார்த்திக்குக்கு பரிசளித்துள்ளார். இதனை கௌதம் கார்த்திக் தனது ட்வீட்டர் பக்கத்தில், சிம்பு ரசிகர்களே, அவர் மிகவும் நல்லவர், பரந்த மனம் கொண்டவர் என பதிவிட்டுள்ளார்.
For the #STR fans out there! He is such a gem of a human being! Big heart ❤!
Thank you brother! You rock! ???????????? pic.twitter.com/SeMLnCE3r5— Gautham Karthik (@Gautham_Karthik) June 26, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025