சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவருக்கு இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.
விஜய், அஜித்திற்கு பிறகு இவரது திரைப்படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இவர் தற்போது டான், மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகரும், வாலி,குஷி போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது ” சிவகார்த்திகேயன் சார் மிகவும் நல்ல மனிதர். அவர் இப்போது இருக்கும் உச்சம் மிக பெரியது. டான் படப்பிடிப்பிற்கு வரும் போது தான் பெரிய நடிகர் என்பதை காட்டிகொள்ளமாட்டார்.
விஜய் சாருக்கு அடுத்த படியா குடும்ப ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சிவகார்த்திகேயன் படத்திற்கு தான் செல்கிறார்கள். அவர் எங்கள் வீட்டு பிள்ளை என்ற அன்பை பெற்றுள்ளார். டான் படத்தில் அவருடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…