Categories: சினிமா

Soundarya : கேப்டன் விஜயகாந்துடன் நடிக்க மறுத்த சௌந்தர்யா! காரணம் என்ன தெரியுமா?

Published by
பால முருகன்

நடிகர் விஜயகாந்துடன் நடிக்க ஆரம்ப காலகட்டத்தில் பல நடிகைகள் தயங்கி உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை சௌந்தர்யாவும் ஒருவர். இவர் விஜயகாந்திற்கு ஜோடியாக தவசி  திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிக்க முதலில் நடிகை சௌந்தர்யாவுக்கு விருப்பமே இல்லயாம். ஏனென்றால், நடிக்கும்போது விஜயகாந்தை பார்த்து சவுந்தர்யா மிகவும் பயந்தாராம்.

படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு படத்தின் படப்பிடிப்புக்கு வராமல் படத்தை முற்றிலுமாக தவிர்த்துள்ளார். ஏனென்றால், அந்த சமயம் விஜயகாந்தை பற்றி சிலர் தவறாக எழுதி தகவலை பரப்பினார்களாம். இந்த தகவலை சௌந்தர்யா பார்த்தவுடன் விஜயகாந்துடன் நடிக்க பயந்து நான் தவசி படத்தில் நடிக்கவே இல்லை எனவும் கூறிவிட்டாராம்.

பிறகு விஜயகாந்த் என்ன தான் அந்த பொண்ணுக்கு பிரச்சனை என கேட்டாராம். உடனடியாக படத்தின் தயாரிப்பாளர்கள் சௌந்தர்யாயாவுக்கு கால் செய்து தொடர்பு கொண்டு பேசும்போது இப்படி தனக்கு பயமாக இருக்கிறது என கூறினாராம். இதன் பின் விஜயகாந்த் என்னை பார்த்தால் அப்படியா இருக்கு? என சிரித்துக்கொண்டே கேட்டாராம்.

பிறகு அந்த பொண்ணு நடிக்க வேண்டாம் ஒரு இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு வந்து படப்பிடிப்பில் நான் எப்படி இருக்கிறேன் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை பார்த்துவிட்டு அதற்குப் பிறகு படத்தில் நடிக்க சொல்லுங்கள் என விஜயகாந்த் கூறிவிட்டாராம் . இதனைக் கேட்டவுடன் சௌந்தர்யாவும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இரண்டு நாட்கள் பார்த்தாராம்.

அந்த இரண்டு நாட்கள் சௌந்தர்யா இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இரண்டு நாட்களும் படப்பிடிப்பில் எப்படி எல்லாம் விஜயகாந்த் நடந்து கொள்கிறார் என்பதை பார்த்த சௌந்தர்யா இப்படிப்பட்ட ஒரு மனிதரை சந்தேகப்பட்டு விட்டோமே என்பது போல வியந்து பார்த்து படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு பிறகு படத்தில் நடித்தாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் உதய் சங்கர் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தவசி. அதிரடி ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக உருவாகி வெளியான  இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

19 minutes ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

7 hours ago

தனது ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித் குமார்.! வைரலாகும் வீடியோ..,

இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…

8 hours ago

CSK vs RR: பவுலிங்கில் மிரட்டிய ராஜஸ்தான்.., 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

9 hours ago

ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…

10 hours ago

பாகிஸ்தான் தளபதிக்கு பதவி உயர்வு.! யார் இந்த அசிம் முனீர்.?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…

11 hours ago