விஷாலின் இரும்புத்திரை-2 என்ன நிலைமையில் உள்ளது?!

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார்.இப்படம் இணையத்தில் நடக்கும் சைபர் க்ரைம் பற்றி விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படமும் அதே போல சைபர் க்ரைம் பற்றி பேச உள்ளதாம். இதிலும் ராணுவ வீரராக விஷால் நடிக்க உள்ளாராம்.
இப்படத்தின் கதையை தயார் செய்து கொடுத்த இயக்குனரிடம், ‘ இந்த படத்திலும் மீண்டும் வந்த சீன் வருவது போல இருந்ததாம். அதனால் மீண்டும் திரைக்கதையில் புதுசாக புகுத்தி கொண்டு வாருங்கள் என கூறி அனுப்பியுள்ளாராம். சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இந்த படத்தை விஷால் தொடங்க உள்ளாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025