தேசிய விருதை குறி வைத்த ‘கொட்டுக்காளி’! சஸ்பென்ஸுடன் வெளியான ட்ரைலர்!

சென்னை : கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் இன்று (13-ம் தேதி) காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த படி, வெளியிடப்பட்டது. ட்ரைலர் பார்ப்பதற்கு ஒரு சஸ்பென்ஸுடன் மையக்கருவை நோக்கி நகர்கிறது.
சூரியின் நடிப்புக்கும், அன்னா பென் அமைதிக்கான காரணமும், சேவல் கூவலுக்கும் விடையானது படம் திரையரங்கில் வெளியான பிறகே தெரிய வரும். ஆனால், விடுதலை படத்தை போலவே இந்த படம் ஒரு தரமான கதையை சொல்ல போகிறது மட்டும் தெரளிவாக தெரிகிறது.
நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம் போர்ச்சுகல் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான லின்க்ஸ் விருதை வென்றுள்ளது. அது மட்டும் இல்லாமல், பெர்லின் சர்வதேச திரைப்பட விழா மற்றும் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. மேலும், பெர்லின் விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றிருக்கிறது.
நடிகர் சூரி கடைசியாக ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரின் ‘கருடன்’ படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றது. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நாயகனாக அறிமுகமான சூரியின் இரண்டாவது படம் கொட்டுக்காளி ஆகும். நடிகை அன்னா பென்னுக்கு இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முதல் அறிமுகமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025