vijay [File Image]
Thalapathy 69 : தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது விஜயின் 68 -வது படம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் தனது 69 -வது படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார்.
எனவே, கடைசி படம் தரமாக இருக்கவேண்டும் என்று அவரும் அவருடைய ரசிகர்களும் ஆசைப்பட்டு யார் இயக்குனர் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட விஜயின் 69-வது படத்தை இயக்குவது தீரன், வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச்.வினோத் தான் என்பது உறுதியாகிவிட்டது என்றே சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எச்.வினோத் விஜய்யை வைத்து இயக்கும் படம் எந்த மாதிரி கதையம்சத்தை கொண்ட படம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தளபதி 69 படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்படவுள்ளதாம். தற்போது படத்தின் கதையை மெருகேற்றும் பணியில் தான் எச்.வினோத் திவீரமாக ஈடுபட்டு வருகிறாராம்.
எச்.வினோத் ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால், தற்போது கமல்ஹாசன் தக்லைஃப் படத்தில் நடித்து வருவதால் அதற்குள் நாம் ஒரு படத்தை இயக்கி முடித்துவிடலாம் என்று எச்,வினோத் திட்டமிட்டு விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் கோட் படத்தில் நடித்து முடித்து படம் வெளியான பிறகு தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…