“நா ரெடிதா வரவா” லியோ வெற்றிவிழா கொண்டாட வருகிறார் தளபதி விஜய்?
லியோ படத்தின் வெற்றிவிழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 1-ம் தேதி படக்குழு கொண்டாட படக்குழு திட்டம்.
லியோ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விழாவில் தளபதி விஜய் கலந்துக்கொள்ள உள்ளதாகவும், இதனால் இந்த விழாவுக்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்டு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளார் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இதற்கு, காவல்துறையினர் அனுமதி வழங்கினால் லியோ வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இந்த தகவல் உண்மை என்றாலும், காவல்துறையினர் அனுமதி வழங்கினாலும் தளபதி விஜய் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம், விஜய் தனது அடுத்த படமான தளபதி 68 திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவர் வருவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த படத்தின் கெட்டப் வெளியே தெரிந்து விடும் எனபதால், வருகிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
அன்பு காதலி அதிதிக்கு அழகான பிறந்த நாள் வாழ்த்து கூறிய சித்தார்த்! வைரலாகும் பதிவு!
லியோ பாக்ஸ் ஆபிஸ்
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான “லியோ” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 9 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் – தம்பி ராமையா குடும்பம் ஒன்றிணைந்த தருணம்! மகன்-மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்…
லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.