rajini and nelson vijay [File Image]
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மக்களுக்கு மத்தியில் சூப்பரான விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. ஜெயிலர் படத்தின் கதையை ரஜினிகிட்ட கூறவேண்டும் என விஜய் தனக்கு பலமுறை புத்துணர்ச்சி கொடுத்து தன்னை ஊக்கவித்ததாக நெல்சன் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது கூட நெல்சன் ” விஜய் சார் தான் ரஜினி சாரிடம் கதை கூற வேண்டும் என பீஸ்ட் படம் செய்துகொண்டிருந்த சமயத்தில் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்” என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என விஜய் விடிவி கணேஷிடம் கூறியதாக நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பு அதாவது ஒரு 6 மாசத்துக்கு முன்னாடி விஜய் சார் விடிவி கணேஷிடம் நெல்சன் ஜெயிலரில் வெற்றிபெற்று திரும்பி வருவார் நீ வேணுமென்றால் பார் என்று கூறினார். பீஸ்ட் சில கலவையான பதிலைப் பெற்ற பிறகு விஜய் சார் மிகவும் பாசிட்டிவாகவும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார்.
அதைப்போல, பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் என்னை பாதிக்கக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். பீஸ்ட் திரைப்படம் வெளியான பிறகும் கூட அவர் கிட்டதட்ட என்னை ஒரு மாதத்திற்கு மேலாக ஒவ்வொரு நாளும் என்னை தொடர்ந்து அழைத்து ஜெயிலர் படத்திற்காக என்னை ஊக்கப்படுத்தினார்” எனவும் நெல்சன் கூறியுள்ளார்.
இந்த தகவலை பார்த்த விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் கூட அந்த இயக்குனரை அழைத்து மற்ற நடிகரின் படத்திற்கு ஊக்குவிக்கும் மனசு மிகப்பெரியது என விஜய்யை புகழ்ந்து பேசி வருகிறார்கள். மேலும், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது விமர்சன ரீதியாக சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…