mankatha [File Image]
ஒவ்வொரு நடிகருக்கும் 50-வது படம் என்றால் ஒரு முக்கிய படமாக இருக்கும். எனவே, கண்டிப்பாக 50 -வது படத்தில் பெரிய ஹிட் கொடுக்கவேண்டும் என்பதற்காக நடிகர்கள் பல வித்தியாச வித்தியாசமான கதைகளை கேட்டு நடிப்பது உண்டு. அப்படி தான் நடிகர் அஜித்தும் தன்னுடைய 50-வது படமான மங்காத்தா படத்தில் நடித்திருந்தார்.
மங்காத்தா
இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபு அஜித்திடம் கூறியவுடன் நான் செய்கிறேன் என முடிவெடுத்து மிரட்டலான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். எந்த ஒரு ஹீரோவும் தன்னுடைய 50-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால், அஜித் ஒப்புக்கொண்டு படத்தில் நடித்துக்கொடுத்தார்.
மங்காத்தா படம் வெளியாகி 12 ஆண்டுகள்
படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இன்றுவரை அஜித்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் என்றாலும் அது மங்காத்தா திரைப்படம் தான். இதே நாளில் கடந்த 12-ஆண்டுகளுக்கு முன்பு தான் மங்காத்தா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து, ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் 12YrsOfKWFameMANKATHA எனும் டேக்கை க்ரேயட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
ரஜினி கொடுத்த அட்வைஸ்
ஒரு சமயத்தில் அஜித்தின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வந்த காரணத்தால் ஒரு முறை ரஜினியை அஜித் சந்தித்த போது அஜித்துக்கு ரஜினி அட்வைஸ் ஓன்றை கூறினாராம். அது என்னவென்றால், உங்களுக்கு வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும் அதனை தேர்வு செய்து நடிங்கள் என கூறினாராம் . பிறகு அஜித் ரஜினி கூறிய அறிவுரையை கேட்டுக்கொண்டு மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்தாராம்.
பில்லா படத்தை பண்ணுங்க
நடிகர் அஜித்குமார் பில்லா திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினியை சந்தித்தபோதும் நீங்கள் என்னுடைய பில்லா படத்தை எடுத்து பண்ணுங்க என அஜித்திடம் ரஜினி கூறியிருந்தார். அதைப்போல அஜித்தும் பில்லா படத்தை எடுத்து ரீமேக் செய்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அந்த படமும் பெரிய அளவில் அஜித்திற்கு ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…