vijayakanth [File Image]
நடிகர் விஜயகாந்த் பண உதவிகள் மற்றும் பலருக்கும் சாப்பாடு கொடுத்து உதவி செய்தது மட்டுமின்றி பல நடிகர்களுக்கு தன்னுடைய படங்களை விட்டும் தனக்கு வரும் பட வாய்ப்பை மறுத்துவிட்டு இந்த ஹீரோக்கு சரியாக இருக்கும் அவரிடம் சொல்லுங்கள் என கூறி அந்த நடிகருக்கு வாய்ப்பு கொடுத்துவிடுவார். இதனை பல நடிகர்களும் தெரிவித்தது உண்டு.
குறிப்பாக ஒரு பேட்டியில் கூட நடிகர் சரத்குமார் பேட்டி ஒன்றில் :”பெரிய இயக்குனர் விஜயகாந்திற்கு கதை கூறியதாகவும் அந்த கதையை கேட்டு மிகவும் சந்தோசம் அடைந்துவிட்டு இந்த கதையை சரத்குமார் கிட்ட கூறுங்கள் என அந்த இயக்குனரிடம் கூறிவிட்டு தன்னிடம் இதனை பற்றி விஜயகாந்த் கூறியதாக”சரத்குமார் தெரிவித்திருந்தார்.
அற்புதமாக அட்வைஸ் செய்த விஜயகாந்த்! துளி கூட காது கொடுத்து கேட்காத கௌசல்யா!
இந்த நிலையில், அப்படித்தான் ஒரு கதை வைத்து விட்டு விஜயகாந்திடம் கூற சென்றபோது அவரை நடிகராக ஒரு படத்தில் நடிக்க வைத்து அவருக்கு பெயரையும் அடுத்ததடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அந்த நடிகர் வேறு யாருமில்லை பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான லிவிங்ஸ்டன் தான்.
இதுவரை லிவிங்ஸ்டன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் பெரிய அளவில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவும் மறக்கும்படியாத வகையில் இருக்கும் கதாபாத்திரம் எதுவென்றால், அவர் விஜயகாந்துடன் ” பூந்தோட்ட காவல்காரன்” படத்தில் ராம்குமார் எனும் கதாத்திரத்தில் நடித்தது தான். இந்த கதாபாத்திரம் அந்த சமயம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லவேண்டும்.
பணம் வேஸ்ட் ஆயிடும் நான் மரத்து மேலயே இருக்கிறேன்! தயாரிப்பாளரை நெகிழ வைத்த விஜயகாந்த்!
அது மட்டுமின்றி. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் இவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தொடர்ச்சியாக குவிய தொடங்கியது என்றே சொல்லலாம். ஆனால், முதலில் இந்த படத்தில் நடிக்கபோறோம் என்பது இவருக்கு தெரியவே தெரியாதாம். விஜயகாந்திடம் ஒரு படத்தின் கதையை கூறதான் சென்றாராம்.
விஜயகாந்த் நாளைக்கு கதை சொல்ல வா என்று ” பூந்தோட்ட காவல்காரன்” படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை காமித்து கூறிவிட்டாராம். பிறகு அடுத்த நாள் லிவிங்ஸ்டன் கதையை கூற சென்றாராம் அப்போது நேற்று இந்த படத்தில் நீ ஒரு கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பாய் என்று கூறினேன் எனவே அதனால் உன்னை இன்று நடக்கும் படப்பிடிப்பிற்கு வரச்சொன்னேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
கமல் சாரோட நட்பை நானே கெடுத்துட்டேன்! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் லிவிங்ஸ்டன்!
அதற்கு, லிவிங்ஸ்டன் என்னுடைய கதை அப்போ பிடிக்கவில்லையா சார் என்று கேட்டுள்ளார். பின் விஜயகாந்த் கதை முதல் பாதி நன்றாக இருக்கிறது ஆனால், நான் உன்னை இந்த படத்தில் நடிக்க வைக்கத்தான் இன்று வரச்சொன்னேன் என்று கூறியுள்ளார். பிறகு விஜயகாந்த் கூறிய காரணத்தால் இந்த ” பூந்தோட்ட காவல்காரன்” படத்தில் நடித்துக்கொடுத்தாராம். இந்த தகவலை லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…