sivakarthikeyan Venkat Prabhu [file image]
Sivakarthikeyan : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து ஒரு படம் செய்யவுள்ளதாக பேட்டிகளின் மூலமே அறிவித்து இருந்தார்கள். இருந்தாலும் இருவரும் தற்போது தாங்கள் கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிஸியாக இருப்பதன் காரணத்தால் இன்னும் இருவரும் இணைந்து படம் செய்ய முடியாமல் இருக்கிறது. வெங்கட் பிரபு விஜய்யை வைத்து தற்போது கோட் படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார்.
இந்த திரைப்படத்தினை இயக்கி முடித்த பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எந்த மாதிரி ஒரு கதையம்சத்தை கொண்ட படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் அதிகமாக எழுந்து இருக்கிறது.
இந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு படத்திற்காக சிவகார்த்திகேயன் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்படவுள்ளதாம். 100 கோடி பட்ஜெட் என்றால் அந்த அளவிற்கு பொருட்செலவில் எல்லாம் எடுக்கப்படவில்லையாம்.
இந்த படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளமாக 40 கோடி வாங்க இருக்கிறாராம். எனவே, அவருக்கே 40 கோடி சம்பளம் போய்விட்டது என்றால் மிச்சம் இருப்பது 60 கோடி தான் அந்த 60 கோடியில் படத்தில் நடிப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். எனவே, அதற்கு எவ்வளவு செலவு ஆகப்போகிறது என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் காமெடியான கதை சிவகார்த்திகேயனுக்கு நன்றாகவே செட் ஆகும்.
அதைப்போலவே, வெங்கட் பிரபு இயக்கும் படங்களும் காமெடிக்கு பஞ்சமே இருக்காது எனவே, இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்யப்போகிறார்கள் என்றதும் இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…