கடந்த 2010-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் “யாரடி நீ மோகினி”. இப்படதின் கதை, திரைக்கதையை செல்வராகவன் எழுத, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கி இருந்தார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தனுஷிற்கு பெரிய வசூல் கொடுத்த படமாக திகழ்ந்தது.இந்த திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவு செய்தது. ரசிகர்கள் #14yearsofyaaradineemohini என்ற ஹஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இதனடுத்து ஊடகத்திற்கு பேட்டியளித்த மித்ரன் ஆர்.ஜவஹர் பல சுவாரஸ்மான விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் ” யாரடி நீ மோகினி படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவுபெற்றுள்ளது மகிழ்ச்சி. இந்த படத்தை நியாபகம் வைத்துள்ளார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது, மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
முதலில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நயன்தாராவை தேர்வு செய்தோம். ஆனால், தனுஷ் சார் யோசிச்சார். அதற்கு பின் நாங்க உங்களுக்கு அவங்க பாஸ் கதாபாத்திரம் அதனால் சரியாக இருக்கும் என கூறினோம். அதன் பிறகு இருவரும் நடித்தார்கள். அவர்களது ஜோடி ரசிகர்களுக்கு பிடிக்கும் படியாக அமைந்தது.” என தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…