சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் சிறப்பு வீடியோ வெளியிட்டது படக்குழு.

Rajinikanth - Coolie

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகத் தயாராகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் பெரிய திரைகளில் வெளியாக இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதைப் பற்றிய ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், வெளியிட்டுள்ளது.

ஒரு சிறிய ப்ரோமோவைப் பகிர்ந்த தயாரிப்பாளர்கள், “அரங்கம் அதிரட்டுமே, விசில் பறக்கட்டுமே. கூலிஇன் 100 நாட்கள். ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் கூலி” என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில், சூப்பர் ஸ்டாரின் பின்னணியில் ஒரு ஹைப் பாடலுடன் ஒரு புதிய வீடியோ தொடங்குகிறது.

”கூலி பவர்ஹவுஸ்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பாடலில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா அக்கினேனி, உபேந்திர ராவ், சத்யராஜ் மற்றும் சௌபின் ஷாஹிர் ஆகியோரின் தலைக்கு பின்னால் இருந்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த படத்தில் ரஜினிகாந் தவிர, சைமனாக நாகார்ஜுனா, கலீஷாவாக உபேந்திரா, தயாளாக சௌபின் ஷாஹிர், ராஜசேகராக சத்யராஜ், ப்ரீத்தியாக ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்