MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

MIvsGT

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் அந்த அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறும்.

தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மும்பைக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இப்பொது, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்க போகிறது.

குஜராத் டைட்டன்ஸ் :

கேப்டன் ஷுப்மான் கில் தலைமையிலான அணியில்,சாய் சுதர்சன்,ஜோஸ் பட்லர், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ஜெரால்டு கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் :

கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில், ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ராஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவைப்படும் சூழ்நிலையில், இரு அணிகளும் இன்று வெற்றிக்கு தீவிரமாக முயற்சி செய்யும் என்பதால் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. இருவரும் தற்போது தங்கள் கணக்கில் 14-14 புள்ளிகளைக் கொண்டுள்ளனர். ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திலும் உள்ளன.

தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, ஹார்டிக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியின் தன்னம்பிக்கை உச்சத்தில் உள்ளது. நடப்பு சீசனில் சுப்மன் சேனா அணிக்கு எதிரான தோல்விக்கு இன்றைய தினம் பழிவாங்கும் நோக்கில் மும்பை களமிறங்கும். கடந்த மார்ச் 29 அன்று அகமதாபாத்தில் இந்த இரு அணிகளும் மோதியபோது, ​​குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்