indian 2 [FIle Image]
சென்னை: இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடலான “பாரா” நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடலின் புரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்பொழுது, போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணியை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளிவந்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள “பாரா” பாடலுக்கு பா.விஜய் வரிகள் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…