JailerUpdate [file Image]
நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். தற்போது, ஒரு சுவாரசியமான அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அதாவது, ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு மாஸ் வெடியோவுடன் வெளியிட்டுள்ளது. வீடியோவில் அனிருத்தின் BGM வேற லெவலில் இருக்கிறது. மேலும், சூப்பர் ஸ்டாரின் என்ட்ரி அத விட மாஸாக உள்ளது. குறிப்பாக இந்த வீடியோவில், படத்தில் நடிக்கும் அணைத்து கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ…
இந்த படத்தில், சூப்பர் ஸ்டாருடன் தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசைமைப்பாளர் அனிருத் இசைமைக்க, சன் பிக்ஸ்சர்ஸ் தயாரிக்கிறது.
தற்போது, இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்ப விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தனது போர்ஷன்களை முடித்திவிட்டார். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…