thalapathy 69 [File Image]
சென்னை : விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்திற்கான கதை குறித்த விவரம் கசிந்துள்ளது.
நடிகர் விஜயின் 69-வது திரைப்படத்தினை தீரன், வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக ஏற்கனவே, தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும், இன்னும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விஜய் தற்போது “கோட்” படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்த “கோட்” படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியான பிறகு “தளபதி 69” படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், “தளபதி 69” படம் குறித்தும் அவ்வப்போது தகவல்களும் பரவி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போதும் சில லேட்டஸ்ட் தகவல்கள் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால், விஜயின் 69-வது படத்தை இயக்கும் இயக்குனர் எச்.வினோத் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே படத்தின் முழு கதையை எழுதி கொடுக்கும் வேலையாக கேரளாவில் இருக்கிறாராம். விரைவில் கதை முழுவதையும் எழுதி தயார் செய்துவிட்டு விஜயிடம் காமிக்கவும் இருக்கிறாராம். ஒரு தகவல் இது என்றால் மற்றோரு தகவல் தளபதி 69 படத்தின் கதை எப்படி பட்ட கதையை கொண்டது என்பது பற்றி தான்.
அதன்படி, தளபதி 69 படம் முழுக்க முழுக்க ஒரு சீரிஸ் ஆக செல்லும் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்படவுள்ளதாம். படத்தில் விஜய் மக்களுக்காக போராடும் தலைவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறாராம். அதாவது மக்களுடைய பிரச்னையை எடுத்துக்கூறி மக்களுக்காக போராடும் நிலையில், மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொள்கிறார்களாம். இப்படி தான் தளபதி 69 படத்தின் கதை களம் அமைந்துள்ளதாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…