manisha yadav [File Image]
பிரபல இயக்குனரான சீனு ராமசாமி கிராமத்து மண் வாசனை மாறாமல் அசத்தலான படங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில், அவருடைய இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம்பொருள் ஏவல் திரைப்படம் நீண்ட ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆனால், முதன் முதலாக இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நடிகை மனிஷா யாதவ் தானாம். ஆனால், படத்தில் நடிக்கும் போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வந்தபோது சீனு ராமசாமி மனிஷா யதவுக்கு பயங்கரமான டார்ச்சரை கொடுத்தாராம். இதனால் மனம் உடைந்து போன நடிகை மனிஷா யாதவ் கண்கலங்கி அழுதாராம்.
இப்படி டார்ச்சர் கொடுத்த காரணத்தால் மனிஷா யாதவ் ஒரு வாரம் கூட படப்பிடிப்பில் இருக்க முடியவில்லையாம். பின் நடிக்க முடியாமல் கண்கலங்கி படத்தில் இருந்து வந்துவிட்டாராம். இதனை போன் செய்து மனிஷா யாதவ் கூறியதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார்.
பிக் பாஸ் விட்டு பிரதீப் வெளியே வந்தாலும் அவர் தான் வின்னர்! ஆதரவாக களமிறங்கிய ஹரிஷ் கல்யாண்!
சீனு ராமசாமி என்னவெல்லாம் பாலியல் தொந்தரவு செய்தார் என எல்லா விஷயங்களையும் கால் செய்து பிஸ்மியிடம் கூறினாராம். மாமனிதன் என்ற படத்தை இயக்கிய அவருடைய இன்னொரு முகம் இது தான் என பிஸ்மி பகீர் தகவல் ஒன்றை கூறியிருந்தார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சீனு ராமசாமி இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க… இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்” என சீனு ராமிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…