சினிமா

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம்? பொண்ணு யாரு தெரியுமா?

Published by
பால முருகன்

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் சினிமாவில் இருக்கும் குடும்பங்களிலே பெண் எடுத்துக்கொண்டு திருமணம் செய்வது உண்டு. அப்படி தான் தற்போது மார்க் ஆண்டனி எனும் மெகாஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் விரைவில் பெரிய நடிகர் ஒருவருடைய மகளை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறாராம்.

அவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த பெண் யாரும் இல்லையாம். பிரபல நடிகரான பிரபுவின் மகளை தானாம். பிரபுவின் மகளும் ஆதிக் ரவிச்சந்திரனின் மகளும் நட்பாக பழகி வந்தது காதலாக மாறியதாகவும் எனவே, இரு வீட்டாருக்கும் சம்மதம் என்பதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமாகி அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி என படங்களை இயக்கி தொடர் ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இந்த படங்களை எல்லம் தொடர்ந்து அவருக்கு அஜித்தை வைத்து அவருடைய 63-வது படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

அந்த பிரமாண்ட வாய்ப்புடன் அவருக்கு திருமணம் செய்யவும் அவர்களுடைய குடும்பத்தினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதன்படி ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபுவின் மகளுக்கும் வருகின்ற டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாம். இந்த தகவலை பிரபல சினிமா பத்திரிகை யூடியூப் சேனல் வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது பற்றி ஆதிக் ரவிசந்திரன் சொன்னாலே தெரிய வரும். மேலும், ஆதிக் ரவிசந்திரன் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

7 minutes ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

40 minutes ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

3 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

4 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

5 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

6 hours ago