தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட இளைஞர் வெஷா நதியில் குதித்து உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Kahmir person jumped into river and died

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவிய நபர்களையும் தேடும் பணிகள் இந்திய ராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் காஷ்மீர் உள்ளூர் பகுதியில் உள்ளூர் போலீசாரின் தேடுதல் தீவிரமாகியுள்ளது. அப்போது கடந்த சனிக்கிழமை அன்று காஷ்மீர் குல்காம் பகுதியை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே எனும் 23 வயது இளைஞர் காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத கும்பலுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்டார்.

அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில், தான் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, குல்காமின் டாங்மார்க்கில் உள்ள காட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடங்களை காட்டுவதற்காக பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் பிடியில் இருந்து தப்பிய மக்ரே, காஷ்மீர் குல்காம் பகுதியில் உள்ள வெஷா நதியில் குதித்துள்ளார் என்று தெரிகிறது. இதில் ஆறு மக்ரேவை இழுத்து சென்றதில் அவர் உயிரிழந்தார் என்றும், அவரது உடல் குல்காமின் அஹர்பால் பகுதியில் உள்ள அட்பால் ஓடையில் இருந்து மீட்கப்பட்டது என்றும் தகவல் வெளியானது.

தங்கள் மகன் போலீசார் விசாரணையில் உயிரிழந்துவிட்டான் என்றும், இன்னும் உள்ளூர் மக்கள் மீதான விசாரணை தாக்குதல் தொடர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி தனது தளத்தில் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்

அதில், குல்காமில் உள்ள ஒரு ஆற்றில் இருந்து மற்றொரு உடல் மீட்கப்பட்டுள்ளது, இது மோசமான செயல்களுக்கான கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இம்தியாஸ் மக்ரேயை ராணுவம் அழைத்துச் சென்றதாகவும், இப்போது மர்மமான முறையில் அவரது உடல் ஆற்றில் குறித்து உயிரிழந்ததாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்