Categories: சினிமா

படத்துக்கு 10 கோடி விளம்பரத்துக்கு 5 கோடி? அதிர வைக்கும் நயன்தாரா சம்பளம்!

Published by
பால முருகன்

நடிகை நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஐயா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான அவர் 16 ஆண்டுகளாக சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார். இதுவரை 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நயன்தாரா முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு ஒரு படத்தில் நடிக்க 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

கடைசியாக அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நயன்தாரா சில படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.  இதற்கிடையில், படங்களை தவிர மற்ற நடிகைகளை போல விளம்பர படங்களிலும் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் லோகேஷ்.! தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…

அந்த மாதிரி விளம்பர படங்களில் நடிக்க அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி, அவர் விளம்பர படங்களில் நடிக்க சம்பளமாக 5 கோடி கேட்கிறாராம். அவர் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் முன்னணி நடிகையாக இருப்பதால் அவர் ஒரு விளம்பரத்தில் நடித்தால் அந்த விளம்பரம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவது போல விளம்ப படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

எனவே, அவர் கேட்கும் சம்பளத்தையும் நிறுவனங்கள் கொடுத்து தங்களுடைய நிறுவனத்தின் விளம்பரங்களில் அவரை நடிக்க வைத்து வருகிறது.  அவரும் விளம்பர படங்களில் நடிக்க மறுப்பு தெரிவிக்காமல் நடித்து கொடுத்து வருகிறார். இருந்தாலும் ஒரு விளம்பர படத்தில் நடிக்க அவர் 5 கோடி சம்பளமாக கேட்பதாக வெளியான தகவல் கோலிவுட் சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள அன்னபூரணி படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு அவர் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அருண் ராஜா காமராஜ்  இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

16 minutes ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

36 minutes ago

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…

1 hour ago

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…

2 hours ago

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

3 hours ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

4 hours ago