சினிமா

இது ரொம்ப புதுசா இருக்கு ஆண்டவரே! ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் வைட்லட் கார்ட் என்ட்ரி எத்தனை பேர் தெரியுமா?

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், 3-வாரங்கள் ஆன நிலையில், 3 போட்டியாளர்கள் இதுவரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அனன்யா, பவா செல்லத்துரை,  விஜய் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். வாரம் வாரம் தவறாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேஷன் மற்றும் நாமினேஷனும் நடந்து வருகிறது.

கடந்த வாரத்திற்கு முன்பு அதாவது இரண்டாவது வாரம் பவா செல்லத்துரை வீட்டில் இருந்த்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறிய காரணத்தால் அந்த வாரம் மட்டும் எலிமினேஷன் கிடையாயது என பிக் பாஸ் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து கடந்த வாரம் (நேற்று) வீட்டில் இருந்து விஜய் வெளியேறினார்.

இந்த நிலையில், எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைட்லட் கார்ட்  என்ட்ரியின் மூலம் போட்டியாளர்கள் வாரம் வாரம் உள்ளே நுழைவார்கள். வழக்கமாக ஒரு வாரத்திற்கு இரண்டு மற்றும் 1 என்ற கணக்கின் அடிப்படையில் தான் உள்ளே நுழைவார்கள் ஆனால், இந்த முறை  3,4 பேர் இல்லை 5 பேர் வைட்லட் கார்ட்  என்ட்ரியின் மூலம் உள்ளே நுழைய விருக்கிறார்களாம்.

அதற்கான புது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் பிக் பாஸ் வீடே இந்த முறை இரண்டாக இருக்கிறது. இரண்டு வீடுகள் இருப்பதால் வைட்லட் கார்ட்  என்ட்ரியின் மூலம் இந்த முறை 5 பேர் நுழையவுள்ளார்கள் அவர்கள் யார் என்பதை வரும் 28-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும். இந்த 5 பேரில் இரண்டு போட்டியாளர்கள் பெயர் குறித்த விவரங்களும் தற்போது கிடைத்திருக்கிறது. கிடைத்த தகவல்களின்படி, தொகுப்பாளினியாக கலக்கி வந்த அர்ச்சனா அடுத்த வாரம் வைல்ட் கார்டாக ஷோவில் நுழைவது உறுதி ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றொரு போட்டியாளர் தமிழ் சினிமாவை பல ஹிட் பாடல்களை பாடிய பால முருகன் (கனா பாலா) இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளார்களாம். மீதமுள்ள 3 போட்டியாளர்கள் யார் என்பது பற்றிய விவரம் இதுவரை வெளியாகவில்லை. யாரெல்லாம் வீட்டிற்குள் செல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

30 minutes ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

54 minutes ago

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

2 hours ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

2 hours ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

10 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

12 hours ago