varunTej LavanyaTripathi [Image source : instagram/@Varun Tej Konidela]
பிரபல தெலுங்கு நடிகரான வருண் தேஜ் கொனிடேலா தனது நீண்ட நாள் காதலியான நடிகை லாவண்யா திரிபாதியுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். முறையான நிச்சயதார்த்த விழா மூலம் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதவது, நேற்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிக்கொண்டது. விழா முடிந்த உடனேயே, நடிகர் வருண் தேஜ் மற்றும் லாவண்யா இருவரும் தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.
அவரது பெற்றோர், நாக பாபு, சகோதரி நிஹாரிகா கொனிடேலா மற்றும் மாமாக்கள் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் உட்பட ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், அவரது உறவினர்கள் ராம் சரண், அல்லு அர்ஜுன், சாய் தரம் தேஜ், பஞ்ச வைஷ்ணவ் தேஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி காதல்:
வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி ஆகியோர் மிஸ்டர் மற்றும் அந்தரிக்ஷம் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய போது காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர், லாவண்யாவின் பிறந்தநாள் விழாவின் போது, வருண் தேஜ் ஒரு பெரிய வைர மோதிரத்தை அவருக்கு கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…