கம்பேக் கொடுக்கும் விஜய் ஆண்டனி…கவனம் ஈர்க்கும் ‘வள்ளிமயில்’ டீசர்.!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ‘ரத்தம்’ என்ற திரைப்படம் கடந்த அக்டோபர் 6 அன்று வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படமான ‘வள்ளி மயில்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் விஜய் ஆண்டனி தவிர, பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து, அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை வைத்து பார்க்கையில், இது ஒரு கிராமப்புற பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி போலீஸ் அவதாரத்திழும், கதாநாயகி மற்றும் சத்தியராஜ் ஆகியோர் ஒரு பிரச்சனைக்காக போராடுவது போல் தெரிகிறது.
இதனால், இப்படம் மூலம் விஜய் ஆண்டனி காம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன்னென்றால், விஜய் ஆண்டனி நடிப்பில் இந்த ஆண்டு இதுவரை நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அவரது நடிப்பில் வெளியான தமிழரசன், கொலை, பிச்சைக்காரன் 2,இரத்தம் ஆகிய படங்கள் அஅடங்கும். ஆனால், இந்த நான்கு திரைப்படங்களும் எதிர்பார்த்தவெற்றியை பெறவில்லை.
சிவகுமார் கண்டிக்க மாட்டாரா? ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்கணும் – கரு. பழனியப்பன் காட்டம்!
இதற்கிடையில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள அக்னி சிறகுகள், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளிவரக் காத்திருக்கின்றன.