நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதி படம்…உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

Published by
பால முருகன்

வெங்கடகிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நீண்ட கால தாமதமான தமிழ் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த திரைப்படம் இறுதியாக திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் படத்தை வெளியிட  படக்குழு திட்டமிடிருந்த நிலையில், தற்போது அதற்கு முன்பே வெளியாகிறது.

அதன்படி, இந்த திரைப்படம் வரும் மே 19, 2023 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஒரு வித்தியாசமான நபரின் அடையாள நெருக்கடியைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அவர் எப்படி தமிழ்நாட்டை அடைந்து தனது வேர்களைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார் என்பதுதான் கதையின் மையக்கரு.

இப்படத்தில் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் மகிழ் திருமேனி மற்றும் மோகன்ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் மேகா ஆகாஷ், விவேக், ரித்விகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்ததாகவும், நிதி பிரச்சனையால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கல்கள் இப்போது தீர்க்கப்பட்டு, படம் மே 19, 2023 அன்று திரைக்கு வரும். இப்படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியீடுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

58 minutes ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

1 hour ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

3 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

4 hours ago

INDvsENG : “என்னுடைய மகன் கிட்ட சொல்லுவேன்”…5 விக்கெட் எடுத்தது குறித்து பும்ரா எமோஷனல்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…

5 hours ago

குஜராத் பாலம் விபத்து : காரணம் என்ன? வெளிவந்த முக்கிய தகவல்!

குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…

6 hours ago