முகத்தை மூடிக்கொண்டு இளம் பெண்ணுடன் ஓடியது விஷாலா? வைரலாகும் வீடியோ….

Vishal

நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தை முடித்துவிட்டு தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர் விஷாலின் காதல் வதந்திகள் குறித்து அவ்வப்போது இணையத்தில் பரவுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷாலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது, ​​விஷால் நியூயார்க்கில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் இருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கின் தெருக்களில் விஷால் ஒரு பெண்ணுடன் ஒன்றாக நடந்து செல்வதைக் கண்ட ஒரு ரசிகர், அவரை வீடியோ எடுக்க அதனை எதிர்பாராமல் கவனித்த ஆனால் விஷால் தனது ஹூடியால் முகத்தை மூடிக்கொண்டு அந்த பெண்ணின் கைகளை பிடித்து கொண்டு ஓடினார்.

 

இதற்கிடையில், ஒரு சில நெட்டிசன்கள் இது விஷாலின் ஸ்கிரிப்ட் வீடியோ என்றும் படத்தின் ப்ரோமோஷனாக கூறுகின்றனர். இந்த வீடியோவில் இருப்பது உண்மைலயே விஷாலா என்று தெரியவில்லை. அதற்குள், அந்த பெண்ணுடன் இருப்பது அவரது லிவிங் உறவு குறித்த யுகங்களை கிளப்பையுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் விக்ரம்? ஜிவி சொன்ன சுவாரசிய தகவல்!

அண்மையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சர்ச்சையை கிளப்பியது. AI தொழில்நுட்பம் மூலம் முகத்தை மாற்றி இவ்வாறு சில நெட்டிசன்கள் செய்வதால், பெரிய துன்பத்திற்க்கு ஆளாகி உள்ளனர் திரை பிரபலங்கள்.

அந்த வலையில், தற்போது நடிகர் விஷாலும் சிக்கிக்கொண்டாரா என்று தெரியவில்லை. இது குறித்து நடிகர் விஷாலை உண்மை என்னெவென்று விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்