Vishal - Ratnam [file image]
மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றியை தொடர்ந்து, புரட்சி தளபதி விஷாலின் அடுத்த படமான ‘விஷால் 34’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஹரி இயக்குகிறார். விஷாலுக்கு ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு, இயக்குனர் ஹரியுடன் இது 3வது கூட்டணி ஆகும்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிகின்றனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரை வைத்து பார்க்கும்பொழுது, இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில், நடிகை பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக, ‘விஷால் 34’ என்று பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு “ரத்னம்” என பெயரிடப்பட்டுள்ளது.
படக்குழு படத்தின் தலைப்பை அறிவிப்பதற்காக ஒரு மிரட்டல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அதிரடியாக வரும் விஷால் தனது எதிரியின் தலையை பட்டா கத்தியால் தனியாக துண்டிக்கிறார். ரத்தம் தெறிக்க படத்தின் தலைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்ல சாப்பாடு போடுங்க…ரசிகையின் குரலை கேட்டு நடிகர் விஷால் செய்த அந்த செயல்.!
இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவை வைத்து பார்க்கும் பொழுது, விஷால் – ஹரியின் மூன்றாவது கூட்டணி மற்றொரு சூப்பர்ஹிட் படத்தை வழங்க காத்திருக்கிறது என்று தெரிகிறது. மேலும், இந்த படம் மூலம் ஹரி தனது பழைய பாணியிலான கமர்ஷியல் படத்தை வழங்கவுள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக தற்போது, திருச்சியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், விஷால் இயக்குநராக அறிமுகமாகவுள்ள ‘துப்பறிவாளன் 2’ படமும் கையிருப்பில் உள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…