கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்குவோம் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில், காவல்துறையை, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து பணியில் .
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா அச்சம் மக்களிடையே அதிகமாகிக் கொண்டே இருப்பதை, இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும் என பதிவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் வேதனையை போக்கவும், இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…