20 பேர் வந்தால் தான் படம் போடுவோம்! இது என்ன த்ரிஷா படத்திற்கு வந்த சோதனை!
இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி ரோட்’. இந்த திரைப்படத்தில் மியா ஜார்ஜ், ஷபீர் கல்லாரக்கல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட சில பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டே உருவாகி இருந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
பிறகு ஒரு வழியாக இந்த திரைப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீது பெரிய எதிர்ப்பும் இருந்தது. எனவே எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை.
படத்தை பார்த்த பலர் படம் சுமாராக இருப்பதாக கூறி வருகிறார்கள். ஒரு சிலர் படம் ஒரு முறை பார்க்கலாம் என்பது போல கூறி வருகிறார்கள். இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் த்ரிஷா ரசிகர்களை கோபப்படுத்தும் வகையில் விஷயம் ஒன்றை செய்துள்ளார். அப்படி என்ன செய்தார் என்றால் ‘தி ரோட்’ திரைப்படத்தை பார்க்க அவர் ஒரு திரையரங்கிற்கு சென்றாராம்.
அந்த திரையரங்கில் யாருமே பெரிதாக இந்த திரைப்படத்தை பார்க்க வரவே இல்லயாம். 20 பேர் வந்தால் தான் படம் போடுவோம் என்று அந்த திரையரங்கு உரிமையாளர் கூறிவிட்டாராம். பிறகு அந்த பத்திரிகையாளர் 10-வது ஆளாக சென்றதாகவும் பிறகு நேரம் கழித்து ஒரு வழியாக 20 பேர் வந்ததவுடன் படம் போடப்பட்டதாம்.
இதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை எனவும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். இவருடைய பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை என்று கலாய்த்து வருகிறார்கள். மேலும், நடிகை த்ரிஷா தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க த்ரிஷா கமிட் ஆகியும் வருகிறார்.