தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அக்டோபர் 10, 11 இல் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் பெய்யும் என்ற அறிவிப்பு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025