தமிழ் சினிமாவில், இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். இவர் தெலுங்கில் நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து தேசிய விருது வென்றுள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தாக சாணிக் காயிதம், படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது. அதற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் விட்டனர் என்றே கூற வேண்டும். ஏனெனில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் ஆக்ரோசமாக இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்த படத்தை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் கதையை முதலில் கேட்டவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க தயங்கினாராம். அதன் பின், நடிகர் தனுஷ் கீர்த்தி சுரேஷிற்கு போன் செய்து “இந்த படத்தின் கதை மிகவும் அருமையான கதை. முழு மனதுடன் நம்பிக்கை வைத்து படத்தில் நடிங்கள்.. ராக்கி இயக்குனர் அருண் மாதேஷ்வரன் எனக்கு தெரிந்த இயக்குனர்.. படத்தின் கதை எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு கண்டிப்பாக செட் ஆகும்” என தனுஷ் கூறினாராம்.
இதனை நடிகை கீர்த்தி சுரேஷே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு தனுஷும் கீர்த்திசுரேஷும் தொடரி படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தை தொடர்ந்து இருவரும் இணைந்து படம் நடிக்கவில்லை. இதனால் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் காத்துள்ளனர்.
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…